ரஷ்யாவில் கொவிட் தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இரண்டு இலட்சத்து 625பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 73இலட்சத்து 33ஆயிரத்து 557பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 19ஆயிரத்து 706பேர் பாதிக்கப்பட்டதோடு 817பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 90ஆயிரத்து 719பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 65இலட்சத்து 42ஆயிரத்து 213பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *