மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் – விசேட சந்திப்பு இன்று!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இதன்படி,  இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி நிர்மாணம் என்பன அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை மையப்படுத்தி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேநேரம், கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்துடன் கையொப்பமிட்டதாக அமெரிக்காவின் New Fortress நிறுவனம் நேற்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *