கிளிநொச்சி- பூநகரி, கௌதாரிமுனையில் வெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ 600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காயும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தமையை அடுத்து, பூநகரி பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே, கௌதாரிமுனை வெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ 600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காவும் மீட்கப்பட்டுள்ளமையோடு, 28 வயதுடைய ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மீட்கப்பட்ட மஞ்சள், ஏலக்காய் மற்றும் கைது செய்யப்பட்ட நபரையும் பொலிசார், கிளிநொச்சி நீதிமன்றில் இன்று முட்படுத்தவுள்ளனர்.