நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலையின் நினைவேந்தல்!

<!–

நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலையின் நினைவேந்தல்! – Athavan News

 யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் மீது 1995ஆம் ஆண்டு   விமானப்படை மேற்கொண்ட குண்டு வீச்சுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல்  நேற்று (புதன்கிழமை) பிற்பகல் தமிழ்த் தேசியக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தியும் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்தார்.

1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் தமது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் விமானப்படையின் புக்காரா விமானம் நடத்திய கண்மூடித்தனமான குண்டுவீச்சில் 21 மாணவர்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுக்குள்ளாகினர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *