முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு தண்டனைகள் மிகவும் அதிகம் என தனிப்பட்ட முறையில் நினைப்பதாக அமைச்சரவை செய்தி தொடர்பாளரும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், தவறு செய்த ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதிமன்றத்தால் தண்டனை கிடைக்கப்பெற்றுள்ள அதேவேளை, கிட்டத்தட்ட 150,000 வாக்குகளால் மக்களின் விருப்பத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு குடிமகனுக்கு வழங்கப்படக்கூடிய கடுமையான தண்டனை என்றும், ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இதுபோன்ற இரண்டு தண்டனைகள் வழங்கப்படுவது மிகவும் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.