யாழ்ப்பாணம் – வடமராட்சியில் கொரோனோத் தொற்றில் இருந்து குணமடைந்திருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்தார்.
வடமராட்சி நவிண்டிலை சேர்ந்த 37 வயதுடைய தவேந்திரன் துளசிகா எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்..
இப் பெண் சில வாரங்களுக்கு முன்னர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமாகி இருந்தார் எனவும், எனினும் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்தார என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண் வெளிநாட்டில் உள்ளவரை திருமணம் செய்திருந்ததாகவும், மிக விரைவில் வெளிநாட்டில் உள்ள தனது கணவனிடம் செல்ல இருந்தார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்