ஒரு சில உதவிக் கல்விப் பணிப்பாளர்களும், ஆசிரிய ஆலோசகர்களும் எங்களுடைய முடிவை குழப்பும் விதமாக 5000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்காக உங்களுடைய பெயர்களை பதிவு செய்யுங்கள் என்று சில ஆசிரியர்களும் அதிபர்களும் தொல்லை கொடுப்பதாக எங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவரான தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
அரசின் 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் அரசாங்கத்தின் அச்சுறுத்தல் அடக்குமுறை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை யாழில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
செப்டம்பர் அக்டோபர் மாதத்துக்குரிய கொடுப்பனவாக 5ஆயிரம் ரூபாவை கல்வி அமைச்சு வெளியிட்டிருக்கின்றது.
இது முழுக்க முழுக்க அதிபர் ஆசிரியர்கள் சங்கங்கள் நடத்திக் கொண்டிருக்கின்ற திருப்புவதற்காகவே இது வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு கிழக்கிலேயே தகவல்களை திரட்டி இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது என்பதை கொழும்பில் இருக்கின்ற மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் காட்டி ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அத்துடன் செப்டம்பர் அக்டோபர் மாதத்திற்குரிய விசேட கொடுப்பனவாக 5ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கான சுற்று நிருபத்தை கல்வி அமைச்சு அமைத்தற்கான காரணம் என்னவென்றால் இந்த காலப்பகுதியில் சில ஆசிரியர்களும் தொழில்நுட்பத்தின் ஊடாக கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு இருந்தார்கள் அவர்களுடைய தரவுகளை காட்டி எங்களுடைய இந்தப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக இந்த அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது இந்த கற்பித்தல் செயல்பாட்டில் 60 வீதமான மாணவர்கள் பயன்பெற பெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
மேலும் போராட்டங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் மாணவர்களின் நன்மைகள் கருதியே ஈடுபட்டிருந்தோம் அதற்கான கொடுப்பனவை நாங்கள் பெறுவதில்லை என்ற முடிவுடன் இருக்கின்றோம் ஏனென்றால் இது எங்களுடைய போராட்டத்தை திசை திருப்பும் செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது .ஆனாலும் ஒரு சில உதவிக் கல்விப் பணிப்பாளரகளும், ஆசிரிய ஆலோசகர்கள் எங்களுடைய முடிவை குழப்பும் விதமாக 5000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்காக உங்களுடைய பெயர்களை பதிவு செய்யுங்கள் என்று சில ஆசிரியர்களும் அதிபர்களும் தொல்லை கொடுப்பதாக எங்களுக்கு முறைப்பாடு கிடைத்திருக்கின்ற ஆகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்
அத்துடன் சுபோதினி அறிக்கையிலே ஆசிரிய ஆலோசகர் சங்கமும் இணைந்து இருப்பதுடன் அவர்களின் தேவைகளை முன் வைக்கப்பட்டுள்ளன. ஆகவே ஒரு சில பொறுப்பற்ற ஆசிரிய ஆலோசகர்கள் செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்ததுடன் பொறுப்புடன் செய்யப்படும் இந்த ஊடக சந்திப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.