வி.சுகிர்தகுமார்   
  பாடசாலைகளின் மதில்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தும் செயற்பாடுகள் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திலும்; இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயத்தின் மதில்களும் அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டன.

பாடசாலையின் அதிபர் ரி.இராசநாதன் தலைமையில் இடம்பெற்ற சுவரோவிய திறப்பு திறப்பு விழாவில் வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு ஓவியங்களை திரை நீக்கம் செய்து வைத்தார்.

அக்கரைப்பற்று கோளாவில் 1 ஜ சேர்ந்தவரும் பிரித்தானியாவில் வசிப்பவருமான ‘சத்தியம்’ அமைப்பின் ஸ்தபாகரும் இயக்குனருமான கணேசபிள்ளை சத்தியமூர்த்தியின் முழுமையான பங்களிப்போடு வாழும் போதே வழங்கிடுவோம்’;  எனும் கருப்பொருளுக்கு அமைவான நிதிப்பங்களிப்புடன் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டது.

கருத்தாளம் மிக்க குறித்த அழகிய ஓவியங்களை பாடசாலையின் சித்திரப்பாட ஆசிரியரும் சிறந்த ஓவியருமான ரி.சந்திரகுமார் தனது அர்ப்பணிப்பான சேவை மூலம் வரைந்துள்ளார்.

இந்நிலையில் ஓவியங்களை வரைவதற்கு நிதிப்பங்களிப்பு வழங்கியவர் மற்றும் சித்திரங்களை வரைந்தவர் உள்ளிட்ட அனைவருக்கும் பாடசாலை அதிபர் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டார்.

இதேநேரம் கருத்தாளமிக்க விழிப்பூட்டல் சித்திரங்களை வரைந்து பாடசாலை மதில்களை அழகுபடுத்திய பாடசாலை அதிபர் உள்ளிட்;ட கல்வி சமூகத்தை வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *