திருகோணமலை பொது வைத்தியசாலையின் வளாகத்தில் நின்ற வேம்பு மரம் சரிந்து வீழ்ந்ததில் வைத்தியசாலையின் நடைபாதைக் கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளது.
நேற்று புதன்கிழமை (22) இரவு பெய்த கடும் மழையின் காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், அதிஸ்டவசமாக எந்த உயிர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது கட்டத்தின் கட்டுமானம் உறுதியற்ற தன்மை உள்ளதையும் காணலாம் குறிப்பாக தூண்கள் எவையும் கம்பி வைக்காமலேயே கட்டப்பட்டுள்ளமையும் மேலும் பல முறையற்ற கட்டுமானங்களும் வெளிவந்துள்ளன.