2022 வரவு செலவு திட்டத்தின் மூலமாக நாட்டின் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிற்கும் மூன்று மில்லியன் நிதி ஒதுக்க அமைச்சர் பசில் ராஜபக்ஷ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிதி கிராமிய அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் இது தொடர்பாக பல பிரதேசங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
நாடு முழுவதும் உள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை 14022 ஆகும்.
அதன்படி, கிராம நிர்வாக பிரிவுகளுக்கு ரூ. 422066 மில்லியன் ஒதுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தயாராகி வருகின்றன எனவும் இது தொடர்பாக நிதி அமைச்சருக்கும் பல்வேறு அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் பல கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.