வவுனியா – பம்பைமடு குளப்பகுதியில் மீன்பிடிக்கச்சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
58 வயதுடைய மா.சிவசோதி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்நபர், மீன்பிடிப்பதற்காக நேற்று காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில், அவரது உறவினர்கள் குளத்துப்பகுதியில் தேடியுள்ளனர்.
இதன்போது, குளக்கரையில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.