
நிதி அமைச்சர் கௌரவ பசீல் ராஜபக்க்ஷவின் எண்ணக்கருவில் நாடுமுழுவதும் 14000 புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “கிராமத்திற்கொரு தொழில் முயற்சியாளர் செயற்திட்டம்” தொனிப்பொருளில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (23) காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சி. ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
காரைதீவு பிரதேச செயலக விதாதா வள நிலைய விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் ஜனாப். எல். அஸ்வரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கு பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன் அவர்களால் வெற்றிபெற்ற முயற்சியாளராவதற்குரிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தகது.