கடந்த இரண்டு நாட்களில் எலிகாய்சலால் இருவர் உயிரிழந்துள்ளதாக கராபிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது.
ஹிக்கடுவையில் வசிக்கும் 58 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையும், பெந்தர கோனகலபுரவில் வசிக்கும் 48 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரும் வயல் வேலைகள் செய்து கொண்டிருக்கும் வேளையிலே இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது
பின்னர் இருவரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கராபிட்டிய போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி மகேஷ் தர்மரத்ன மற்றும் மேலதிக மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லோகுகே ஆகியோரால் இந்த பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.