ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியை வீழ்த்துமா மும்பை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 34ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அபுதாபியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா அணிக்கு ஓய்ன் மோர்கனும் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளுக்கும் எதிர்வரும் போட்டிகள் பிளே ஓஃப் சுற்றுக்கு நுழைவதற்கு மிக முக்கியமான போட்டிகளாக அமையவுள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெறுவது கட்டாயமாகும்.

நடப்பு தொடரின் புள்ளிப்பட்டியலில், கொல்கத்தா அணி ஆறாவது இடத்திலும், மும்பை அணி நான்காவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *