யாழ்ப்பாணத்தில் இன்று தடுப்பூசி செலுத்திய சிறிது நேரத்தில் இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
நாட்டில் தற்போது 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
அதனடிப்படையில், இன்று யாழ்ப்பாணம், இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் தடுப்பூசி செலுத்திய சிறிது நேரத்தில் இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
அவர், யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், அவர் காலையில் உணவு உட்கொள்ளாமல் தடுப்பூசி செலுத்த வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று, அண்மையில் கல்முனையிலும் தடுப்பூசி செலுத்திய இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.