யாழ். ஏ9 வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் சிக்குண்ட நபரொருவர், கை, கால்கள் உடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து, யாழ்ப்பாணம் – கச்சேரிக்கு அருகாமையில் இடம்பெறுள்ளது.
ஏ9 வீதியில் டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டர் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில், மோட்டர் சைக்கிளில் பயணித்த நபர் கை, கால்கள் உடைந்த நிலையில் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், அவரை வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.