யாழில். மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெற்றிலைக்கேணி கோரியடி என்ற பகுதியில் உள்ள வாடி ஒன்றின் மீதே மின்னல் தாக்கியுள்ளது.

இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *