150 அடி பள்ளத்தில் லொறி விழுந்து சாரதி உயிரிழப்பு!

மாத்தளை குருநாகல் வீதி, தீவில்ல பிஹில்ல பகுதியில், நேற்று இரவு லொறி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

விபத்தில் மாத்தளை யட்டவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய கந்தன் இராஜேந்திரன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணமடைந்தார்.

மேலும், புத்தளத்துக்கு டொலமைட் இரசாயனத்தை ஏற்றிச்சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில், மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *