சில கடைகளைத் திறக்க அனுமதி வழங்காமல் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியது பற்றி இன்னும் சமூகத்தில் நிறைய பேச்சுக்கள் இருக்கின்றன.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத்திடம் இது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.
புத்தகக் கடைகளை திறக்க அனுமதி வழங்காமல் எந்த அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்தார்கள் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டாக்டர் ஹேமந்த ஹேரத், புத்தகக் கடைகளுக்கும் மதுபானக் கடைகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், அது குறித்து எதுவும் கூற முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
புத்தகக் கடைகளை திறந்தால் ஏராளமான நுகர்வோர் புத்தகங்கள் வாங்க குவிவார்கள் எனவும் இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் எனவும் அதிகமான மக்கள் கூடும் இடங்களைத் திறக்க வாய்ப்பளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.