
நாடளாவிய ரீதியில் இன்று மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகளவான காலத்திற்கு மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது
இலங்கை மின்சாரசபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வலயங்களின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு மூன்று மணித்தியாலமும் 20 நிமிடமும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது .
இதன்படி A முதல் W வரையான 20 வலயங்களில் முற்பகல் 9 மணி முதல்மாலை 5 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்தவலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, CC வலயங்களில்காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலம் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

