தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை யாழ். பொலிசாரினால் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதை பொலிசார் தடுத்த போது தடையை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட இவர்களுக்கான வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றில் இடம்பெறவுள்ளது