
திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற வழிப்பறியில் ஈடுபடும் இருவர் பற்றி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முகத்தை முழுமையாக மறைத்துக் கொண்டு செல்லும் இவர்கள், பெண்கள் அணிந்து செல்லும் நகைகளை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்று விடுகிறார்கள்.
தம்பலகாமம், ஈச்சிலம்பற்று, கோமரன்கடவல, மொரவெவ, கிளிவெட்டி, கந்தளாய் மற்றும் சூரியபுர பொலிஸ் பிரிவுகளில் இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
திருட்டு சம்பவங்கள் பற்றிய சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில், இந்த அனைத்து வழிப்பறிகளிலும் ஒரே குழுவினரே ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அவர்களை கைது செய்ய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

