யாழில் வழி திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

யாழ், ஏப் 29

யாழில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற  நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் தொலைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – புறநகர் பகுதியில் இன்றைய தினம் இளைஞர் ஒருவரிடம் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தொலைபேசியை அபகரித்துச் சென்ற நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை,  யாழ்ப்பாணம் மாநகரில் கடந்த ஒரு வாரத்துக்குள் 3 வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் தொலைபேசிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

குறித்த கும்பல்  நூதனமான முறையில் இளைஞர்களை மறித்து தமது சகோதரியுடன் கதைப்பதாகவும் அவருடைய படத்தை பணப்பையில் வைத்திருப்பதாகவும் அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்து தொலைபேசி மற்றும் பணத்தை அபகரித்து கும்பல் தப்பித்து சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *