
சிலதினங்களுக்கு முன்னர் தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து கைலாசா நித்யானந்தா வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,
தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான தேர் பவனியின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழப்பு மிக வேதனையைத் தருகிறது அவர்கள் அனைவரும் பரமசிவபதம் அடைய ப்ரார்த்திக்கிறேன்.
உயிரிழந்த அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் காயமடைந்தவர்கள் விரைவில் குணம் பெற பரமசிவ பரம்பொருளை வேண்டுகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

