21வது திருத்தத்தை கொண்டுவரும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது! மனோ கணேசன்

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டாலும், அவ்வாறான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவிக்கின்றார்.

21வது திருத்த சட்டமூலத்தை எப்போது பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவீர்கள் என தான் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வினவிய போது, தனக்கு அது குறித்து தெரியாது என அவர் பதிலளித்ததாகவும் மனோ கணேஷன் கூறுகின்றார்.

இதையடுத்து, தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பை மேற்கொண்டு 21வது திருத்தத்தை எப்போது பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவீர்கள் என வினவியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தனக்கும் அது குறித்து தெரியாது என மஹிந்த ராஜபக்ஸ தன்னிடம் பதிலளித்ததாக மனோ கணேஷன் கூறுகின்றார்.

அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வந்தால், நாட்டில் தற்போதுள்ள பிரச்சினை முடிவுக்கு வருமா என பிரதமர் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வந்து, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் பட்சத்தில், ஸ்திரதன்மைக்கு அமைய உலக நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்க முன்வரக்கூடும் என தான் பிரதமரிடம் விளக்கமளித்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

எனினும், அதனை பிரதமர் நிராகரித்து தனக்கு பதிலளித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

பொருளாதார பிரச்சினையை தாம் விரைவில் தீர்ப்பதாகவும், அதன் பின்னர் நாட்டு பிரச்சினை தீரும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸஇ தன்னிடம் பதிலளித்ததாக மனோ கணேஷன் தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *