
பிரதமர் பதவிக்கு புதிய நபர் ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக எமது மக்கள் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க தயாராகி வருவதாக அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை என்றால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் அவரை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் பதவி விலகாது விடாப்பிடியாக இருந்து நாட்டை நெருக்கடிக்குள்ள தள்ள மாட்டார் என நம்புவதாகவும் ரதன தேரர் கூறியுள்ளார்.
பிரதமர் பதவி விலகவில்லை என்றால், மக்கள் போராட்டத்துடன் இணைந்து செயற்பட நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

