திரிபோச உற்பத்தி இடை நிறுத்தப்பட்டது

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோச உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோச நிறுவனம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களினால் திரிபோச விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோச இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் சில மாதங்களில் மட்டுமே தமக்கு திரிபோச கிடைத்ததாக அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *