ஆபாச இணையதளத்தில் ஹிருணிகாவின் தொ.இலக்கம் – அழைப்பெடுத்த இளைஞன்

இணையத்தில் பெண்களின் படங்களை பதிவிட்டு, அவர்களின் தொடர்பிலக்கமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தொலைபேசி இலக்கம் பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஹிருணிகா பிரேமச்சந்திர இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்விடயம் குறித்தது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேஸ்புக் வழியாக தரவிறக்கம் செய்யப்பட்ட யுவதிகளின் புகைப்படங்கள் வலைத்தளம் ஒன்றில் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

அவர்களை தொடர்பு கொள்ளலாமென இணைக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களில், என்னுடைய எண்ணும் காணப்படுகிறது.

இவ்வாறு இணையத்தில் இருந்து தனது இலக்கத்தை பெற்ற இளைஞன் ஒருவர், அழைப்பேற்படுத்திய போதே நான் இதனை அறிந்து கொண்டேன்.

என்னை அவர் அடையாளம் கண்டு கொண்டார்.

தவறுக்காக மன்னிப்பும் கோரியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

Leave a Reply