மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் படுகொலைக்கு நீதி வேண்டி இன்றைய தினம்(29) மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சற்றுமுன் இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளை குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒளிப்படம் எடுத்த பொலிஸ் புலனாய்வாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் நேற்றையதினம் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




(வீடியோ இணைப்பு)

