
சமனலவெவ நீர்த்தேக்கப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் குறிப்பிடத்தக்க மழை காரணமாக சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
கடந்த சில மாதங்களாக நீர்த்தேக்கப் பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதும் நீர் மட்டம் குறைவதற்கு மற்றொரு காரணமாகும்.
இதேவேளை , நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில், சமனல வெவவின் இரு புறமும் உள்ள காணிகளில் சிலர் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

