ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட நாடாளுமன்றத்தில் தற்போது சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் கூட்டணியினருக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேற்படி குழுவினரை இலங்கைக்கான சீனத் தூதுவரும் அண்மையில் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.