
நாட்டில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் எதிர்க்கட்சியால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை அரச தரப்பும் தமக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் பாராளுமன்றின் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து நாளை விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் முதல் நாளில் புதிய பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், டிலான் பெரேராவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

