ஜெருசலேம்,ஏப் 29
இஸ்ரேலில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து தாயகம் திரும்புவதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது விமான நிலையத்தில் வழக்கமாக நடத்தப்படும் சோதனையின் போது அவர்களிடம் மர்மப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதை கண்ட அதிகாரிகள் மற்றும் விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். பென் குரியன் விமான நிலையத்தின் புறப்படும் இடத்தில் இருந்த பயணிகள் இதைக்கண்டு சிதறி ஓடினர்.
பாதுகாப்பு ஊழியர்களின் விசாரணையில் அமெரிக்காவை சேர்ந்த அந்த குடும்பம் கோலன் ஹெயிட்ஸ் இடத்திற்கு சென்ற போது வெடிக்காத ஷெல்லை நினைவு பரிசாக கொண்டுவந்துள்ளனர் என தெரியவந்தது.
உயர்மட்ட விமானப் பாதுகாப்பைக் கொண்ட இஸ்ரேல், 1967 மற்றும் 1973 போர்களின் போது சிரியா வசம் இடம் இருந்த கோலன் ஹெயிட்ஸ் என்னும் இடத்தை கைப்பற்றியது. அது இப்பொது இஸ்ரேல் வசம் உள்ளது.
விசாரணைக்கு பிறகு அந்த குடும்பத்தினர் தங்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.