கொழும்பு,ஏப் 29
நாட்டில் வியாழக்கிழமை கொவிட் மரணங்கள் எவையும் பதிவாகவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,504 ஆக அதிகரித்துள்ளது.