கொழும்பு,ஏப் 29
நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவபடுத்தும் அனைத்து கட்சிகளின் பங்குபற்றுதல்களுடன் சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சர்வகட்சி அரசாங்கத்திற்கான பணிகளை அந்த குழு முன்னெடுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.