அரசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் பாரிய பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் வடக்கிலும் நேற்றையதினம் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகளை சிங்கள இணையத்தளங்கள் வெளியிட்டுள்ள நிலையில் அந்த செய்திக்கு சிங்களவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
வடக்கும், தெற்கும் தனி நாடு என்றே சிந்தித்தோம். இன்று வடக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என வெளிப்படுத்தி விட்டார்கள் என பேஸ்புக் பக்கங்கள் மக்கள் பதிவிட்டுள்ளனர்.
வடக்கு மக்கள் எப்போதும் இந்த நாட்டு கிழட்டு மைனாக்கள் (ராஜபக்ஷ குடும்பம்) மீது கோபத்துடனேயே உள்ளார்கள் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போதாவது வடக்கு தெற்கு மக்களின் ஒற்றுமை ராஜபக்ஷ குடும்பத்திற்கு புரியவில்லையா என இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த நல்லிணக்கத்தை பயன்படுத்தி மக்கள் ஏதாவது ஒரு மாற்றத்தை பெரிதாக செய்துவிட வேண்டும் என மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் 21ஆவது நாளாகவும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழர்களுக்கான இனப்பிரச்சினை தொடர்பில் சில சிங்கள மக்கள் சாதகமான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.