ரம்புக்கனை சம்பவம்: 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று கான்ஸ்டபிள்களும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை தெல்தெனிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நேற்று இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ரம்புக்கனையில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட அனைத்து அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதவான் பொலிஸ்மா அதிபருக்கு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *