அக்கரைப்பற்று – பனங்காடு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.