கிளிநொச்சியில் வேம்பு பிளந்து விழுந்ததில் கட்டடம் பகுதி சேதம்..!

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் மின்னல் தாக்கத்தில் வேம்பு பிளந்து விழுந்ததில் கட்டடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் 24ம் வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு இரணைமடு நன்னீர் மீனவர் சங்க கட்டடம் முன்பாக இருந்த வேப்பம் மரத்தினை மின்னல் தாக்கியுள்ளது. குறித்த மரம் பிளந்து முறிந்து விழுந்துள்ளது.

எனினும் இதன்போது குறித்த கட்டடத்தின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் சேத விபரங்கள் தொடர்பான அறிக்கை தயாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *