ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு அத்தியாவசியமான 21 புதிய விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக பரப்பப்படும் சில வதந்திகள் பொய்யானவை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ‘சுதந்திர ஊழியர்’ சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை திறைசேரிக்கு சுமை ஏற்படாத வகையில் விமானத்தின் செலவை விமான நிறுவனம் ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
2022-2025 காலப்பகுதிக்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 21 விமானங்களை குத்தகைக்கு வாங்கவுள்ளமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுந்த விமர்சனங்களை அடுத்து 21 விமானங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோப் குழு பரிந்துரை செய்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையை ஒத்திவைப்பது நிறுவனத்திற்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீலங்கன் சுயாதீன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சுதந்திர தொழிற்சங்கத்தின் தலைவர் ஜனக விஜயபதிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
“ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 24 விமானங்களை இயக்கி வரும் நிலையில், அவற்றில் 8 விமானங்கள் காலாவதியானமை காரணமாக நீக்கப்பட வேண்டும். நாங்கள் தற்போது பயன்படுத்தும் சமீபத்திய விமானங்களுக்கு மாதாந்திர குத்தகையான கட்டணமாக $700,000 செலுத்தி வருகின்றோம்.
இந்த குத்தகை பணத்திற்கு தற்போது புதிய விமானம் அல்லது அதற்கும் குறைந்தளவு இப்போது விமானம் சந்தையில் கிடைக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. இந்த ஒப்பந்தங்கள் முழுவதுமாக திறைசேரி தொடர்பானவை அல்ல. கடந்த காலங்களில் விமான நிறுவனம் தொடர்ந்து இலாபம் ஈட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் விமானம் வாங்கும் முறை தெரியும், ஆனால் தற்போது இதனை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அது மக்களுக்கு தவறாக எடுத்துக்காட்டப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.