கோட்டாபயவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த பொதுஜன பெரமுன!

இடைக்கால அரசாங்கம் எதை அமுல்படுத்தத் தயாராகிறது என்பதை முதலில் ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அதன் பின்னரே ஆட்சியில் இணைவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இடைக்கால ஆட்சி என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத புதிய கருத்து என்றும், கட்சி என்ற வகையில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஜனாதிபதி இதுவரையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அறிவிக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் அவரின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிலைப்பாடு ஜனாதிபதியின் யோசனைக்கு எதிரானது அல்ல. எனினும், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை தோற்கடிக்க எதிரணியின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று அவர் ஒப்புக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *