இலங்கை வருகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக பங்கேற்கும் பொருட்டு பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை இன்று சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டக்கலை சி.எல்.எப் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு வருகை தரும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயைச் சந்திக்கவுள்ளார்.

தொடர்ந்து மலையகத்திற்குச் செல்லவுள்ள அவர் அங்கு பல்வேறு பகுதிகளுக்கும் களவிஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது இ.தொ.க.வின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டவர்கள் இணைந்துகொள்ளவுள்ளனர்.

பின்னர், மே தினக் கூட்டத்தினை நிறைவு செய்து கொண்டு அண்ணாமலை வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *