ஐரோப்பா முழுவதும் எதிர்வரும் வாரங்களில் பிரமாண்ட இராணுவப் பயிற்சியில் ஈடுபட நேட்டோ திட்டம்!

நேட்டோ நாடுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட இராணுவப் பயிற்சியில் ஈடுபட அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இதில் நேட்டோவில் உறுப்பினராக இல்லாத ஃபின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்கின்றன.

ஃபின்லாந்தில் இந்தப் பயிற்சி விரைவில் தொடங்கவுள்ளது. அதில் அமெரிக்கா, பிரித்தானியா, எஸ்தோனியா, லாட்வியா ஆகிய நாடுகள் ஃபின்லாந்து இராணுவத்துடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடும்.

அடுத்தகட்டமாக, 4,500 வீரர்கள் பங்கேற்கும் ‘அதிவிரைவு பதிலடி’ என்ற பயிற்சி வடக்கு மெசடோனியாவில் நடைபெறும். இதில் அமெரிக்கா, பிரித்தானியா, அல்பேனியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் படைகள் பங்கேற்கின்றன.

மே மாதம் 18,000 நேட்டோ வீரர்கள் பங்கேற்கும் பயிற்சி எஸ்தோனியா- லாட்வியா எல்லையில் நடைபெறுகிறது. இதில், பிரித்தானியா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

மே இறுதியில் போலந்தில் நடைபெறும் பயிற்சியில் பிரித்தானியாவின் 1,000 வீரரகள் உட்பட 11 பிற நாடுகளின் படையினர் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *