பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆங்கில ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார் .
எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் நான் அதனை ஏற்க தயார் என்பதோடு ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திப்பில் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது .