இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இன்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ள தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்களின் அனுமதியை ரத்து செய்து புதிய வழங்குனர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,
(1) புதிய சப்ளையர்களுக்கு எரிபொருளைக் கொண்டு செல்வதற்கு உடனடியாகப் பதிவைத் திறக்குமாறும், பணிக்கு அறிக்கை செய்யத் தவறிய சப்ளையர்களின் பதிவை ரத்து செய்யுமாறும் CPSTL க்கு அறிவுறுத்தப்பட்டது. ரயில்கள், அரசுக்கு சொந்தமான பவுசர்கள், எரிபொருள் நிலையத்திற்கு சொந்தமான பவுசர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத தனியார் வாடகை பவுசர்கள் சேவை தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.


