தமிழக பா.ஜ.க. தலைவர் நுவரேலியாவுக்கு திடீர் விஜயம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த மேதின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இன்றையதினம் இலங்கையை வந்தடைந்தனர்.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இன்று பிற்பகல் நுவரேலியாவிற்கு விஜயம் செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், பிரதி தவிசாளர் ராஜதுரை, உப தலைவர் பிலிப் குமார், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜா மற்றும் நுவரெலியா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை தலைவர்கள், உறுப்பினர் உட்பட காங்கிரஸ் அரசியல் அமைப்பாளர்கள் அண்ணாமலை தலைமையிலான குழுவினரை நுவரேலியாவில் வரவேற்றனர்.

இதேவேளை அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *