காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிக்கு ஒருவரை கும்பலொன்று கடுமையாக தாக்கியுள்ளது.
குறித்த தாக்குதலில் காயமடைந்த பிக்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
காலி முகத்திடலில் நேற்று பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் இரு குழுக்களுக்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டது.
பண்டாரநாயக்க சிலையின் கண்களை கட்டி, சிலையின் அடிவாரத்தில் கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்த குழுவுக்கும், கட்சி சார்பற்ற குழுவுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கட்சி சார்பற்ற மக்கள் போராட்டங்கள் என்ற அமைப்பினர் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி, போராட்டத்தின் உண்மையான அர்த்தம் தெரியாதவர்கள் கூடாரங்களில் தங்கி பல்வேறு அத்துமீறல்களை செய்து வருவதாக தெரிவித்தனர்.
இதேவேளை, பண்டாரநாயக்க சிலையின் கண்களை கட்டி தேரர் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த குழுவினர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தத்தக்கது.

