யாழ்ப்பாணம்,ஏப் 30
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்தை இலக்கு வைத்து சற்றுமுன் யாழ் அரியாலைப் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கல்வீச்சு தாக்குதல் காரணமாக பேரூந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



