
மட்டக்களப்பு,ஏப் 30
மட்டக்களப்பு வாகரை பச்சவட்டை பகுதியில் மீன்வளர்ப்பு திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்க சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தனுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள ஏரியில் மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்தது
இதற்கு குறித்த பகுதியிலுள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 70க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திட்டம் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து பச்சவட்டை பகுதி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

