அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில் நுகேகொடையில் சங்கமமாகும் பொதுஜன பெரமுன!

உலக தொழிலாளர் தினமாகிய (மே1) இன்றையதினம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட மே தின பேரணி நுகேகொடையில் இடம்பெறவுள்ளது.

அதேவேளை நுகேகொடை ஆனந்த சமரகோன் வெளி அரங்கில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியாக மேதின நிகழ்வை மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை இன்றையதினம் இடம்பெறும் மே தின நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் விசேட உரையாற்றவுள்ளார்.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியில் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்க தயாராகி வருவதாகவும் அனேகமாக இன்றையதினம் அந்தத் தீர்மானம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *